வரலாற்றுக்கு முந்தைய மர்ம குகைகள்: பிரேசிலும் அர்ஜென்டினாவிலும் கண்டறியப்பட்ட ராட்சத சுரங்கங்கள்

ரியோடி ஜெனிரோ: பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் கண்டறியப்பட்ட மாபெரும் குகைகள் - வரலாற்றுக்கு முந்தைய மர்மம்
பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவின் பூமிக்கு அடியில், மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ அல்லது இயற்கையாக உருவானதோ தெரியாத, வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பிரம்மாண்டமான குகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மர்ம குகைகள் குறித்து ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தக் குகைகள் முதலில் புவியியல் பேராசிரியர் ஹென்ரிச் ஃபிராங்க் அவர்களால் கண்டறியப்பட்டன. 2018 ஆம் ஆண்டு 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியான ஆய்வுப்படி, மர்ம விலங்குகள் இந்தக் குகைகளை உருவாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் பிராந்தியத்தில், 600 மீட்டருக்கும் அதிகமான நீளமும், 1.8 மீட்டர் உயரமும் கொண்ட 1,500 க்கும் மேற்பட்ட குகைகள் கண்டறியப்பட்டன. நீள்வட்ட குறுக்குவெட்டுடன் கூடிய நீண்ட சுரங்கப்பாதைகள் போன்ற இந்த குகைகள் இயற்கைமுறையில் உருவாகவில்லை என்பதை ஹென்ரிச் ஃபிராங்க் கூறினார்.
குகைகளின் சுவர்களில் பிரம்மாண்டமான நகக் கீறல்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. 1.8 மீ உயரம் மற்றும் அரை கி.மீ ஆழம் கொண்ட எந்த விலங்கு குகைகளை தோண்டும்? இதை யானையை விட பெரிய விலங்கு ஒன்றே தோண்டியிருக்க முடியும். டைனோசர்கள் யானையை விட பெரியவையாக இருந்தாலும், அவை குகைகளை தோண்டியதோ அல்லது அதில் வாழ்ந்ததோ இல்லை.
ஹென்ரிச் மேலும் கூறுகையில், "நான் பல குகைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தக் குகைகள் எலி அல்லது எறும்பு தின்னி போன்ற தோண்டும் விலங்குகளால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை தெளிவாகக் காணலாம். குகைகளின் அளவு, வடிவியல் மற்றும் அம்சங்கள், அவை புவியியல் செயல்முறைகளால் உருவானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த குகையும் இதைப் போன்றிருக்கவில்லை" என்று கூறினார்.
இதனால், இந்த குகைகளை உருவாக்கியது யார் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சுமார் 8,000-10,000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் வாழ்ந்த மெகாத்தீரியம் போன்ற ராட்சத விலங்குகள் தோண்டியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இது பனிக்கரடியை போன்று, யானையை விட பெரியதாக இருந்த ஒரு சோம்பேறி விலங்கு ஆகும். இதற்கு சக்திவாய்ந்த மூட்டுகளும், பெரிய நகங்களும் இருந்ததால், அவை இந்த குகைகளை தோண்டியிருக்க வாய்ப்பு உள்ளது.
2018 ஆம் ஆண்டு 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியான ஆய்வு, மனிதர்கள் இந்த ராட்சத உயிரினங்களை எதிர்கொண்டதோடு, அவற்றை வேட்டையாடியிருக்கலாம் எனப் பார்வையிடுகிறது. இந்த குகைகள், ஆதி காலத்தில் மனிதர்களின் பண்புகள் மற்றும் உணவு பட்டியலை அறிந்துகொள்ள ஆதாரமாக இருக்கின்றன.
உங்கள் கருத்துக்கள் கமெண்ட் பண்ணுங்க
What's Your Reaction?






