Poppy Seeds: மெனோபாஸில் இருக்கீங்களா? கசகசாவை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!

Aug 31, 2025 - 17:35
 0  1
Poppy Seeds: மெனோபாஸில் இருக்கீங்களா? கசகசாவை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!

Poppy Seeds: மெனோபாஸில் இருக்கீங்களா? கசகசாவை இப்படி சாப்பிட்டு பாருங்கள்!

Health
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: கசகசா மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது? இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம். வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று, சிறிதளவு நீர் குடித்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூக வலைதளப் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கசகசா - மருத்துவக் குணங்களும் பயன்களும். கசகசா... நம் ஊர் மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கும் உணவுப் பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்குக் கடுமையான தண்டனையை வழங்கி வருகின்றன.

சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க மணக்க மசாலாவுடன் சாப்பிட்டுப் பழகிய நம் ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன் கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காகத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

எந்தவொரு பொருளையும் அளவாகச் சாப்பிட்டால் அது நன்மையைத் தரும். அளவுக்கு மீறி எந்த உணவுப் பொருட்களை உட்கொண்டாலும் அது நமக்குத் தீமையையே கொடுக்கும்.

கசகசா எப்படி கிடைக்கிறது?

வெள்ளை, சிவப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் நீலம் ஆகிய வண்ணங்களில் அழகான பூக்கள் பூக்கிறது. இந்தப் பூக்களிலிருந்து பச்சை நிற 4-6 செ.மீ உயரமும், 3-4 செ.மீ விட்டமும் கொண்ட கோள வடிவிலான காய்கள் தோன்றுகின்றன.

இவை போஸ்தக்காய் என அழைக்கப்படுகின்றன. போஸ்தக்காய் இளமையாக இருக்கும்போது (விதைகள் உருவாகும் தருணத்தில்) அதன் வெளிப்புறத் தோலைக் கீறும்போது வெள்ளை நிற பால் போன்ற திரவம் வெளியேறுகிறது.

இத்திரவமே ஓபியம், ஹெராயின், மார்பின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இத்திரவம் மருந்துப் பொருட்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

பச்சை நிற போஸ்தக்காய் முற்றி, பழுப்பு நிறத்திற்கு மாறியதும் உள்ளிருக்கும் விதைகளே கசகசாவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பாப்பி தாவரத்திலிருந்து 10,000 - 60,000 வரையிலான கசகசா விதைகள் பெறப்படுகின்றன.

கசகசாவின் மருத்துவ குணங்களைப் பற்றிப் பார்ப்போம்:

வயிற்றுப்போக்கு: வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று, சிறிதளவு நீர் குடித்து வர, வயிற்றுப்போக்கு நிற்கும்.

உடல் வலிமை பெற

கசகசா, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்துப் பொடியாக்கி, காலை, மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு உண்டுவர, உடல் வலிமை பெறும்.

தூக்கமின்மைப் பிரச்சினை

தூக்கமின்மைப் பிரச்சினை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் நன்றாகத் தூக்கம் வரும்.

நீரிழிவு நோய்: கசகசாவைத் துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். நீரிழிவு நோய் கட்டுப்படும். தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும். விந்து கட்டும். ஆண்மை பெருகும். உடல் பொலிவு பெறும். நரம்புகள் பலம் பெறும்.

மாதவிடாய்: மாதவிடாய் முடிவுக்கு வரும் மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு உடல் வறண்டு போகும். கண்களைச் சுற்றி கருவளையமும் சுருக்கமும் உண்டாகும். உடல் பலமும் குறையும். அப்போது கசகசா மற்றும் பாதாம்பருப்பை அரைத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கெட்ட கொழுப்பைக் குறைக்க

கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். அதிலுள்ள ஒலிக் அமிலம் (Oleic acid), லினோலியிக் அமிலம் (Linoleic acid) போன்ற அமினோ அமிலங்கள் மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

வாய்ப்புண்கள்: கசகசா விதைகள் உடலுக்குக் குளிர்ச்சி அளித்து வாய்ப்புண்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு, வாய்ப்புண்களை விரைவில் ஆற்றுகின்றன. உலர்ந்த தேங்காய், பொடித்த சர்க்கரை மிட்டாய், வறுத்த கசகசா விதைகள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.

வாய்ப்புண்களிலிருந்து உடனடி நிவாரணம் பெற, இந்தக் கலவையைச் சிறு சிறு துண்டுகளாகச் செய்து, மிட்டாய் போல மென்று சுவைத்துச் சாப்பிடுவதன் மூலம் வாய்ப்புண்கள் விரைவில் குணமாகும். இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. More From

Prev
Next

சுகாதாரம்

சுகாதாரம்

English summary
Poppy seeds (kasakasa) are restricted from being carried to certain countries, but they hold remarkable health benefits. Especially for women during menopause, poppy seeds help ease various symptoms and improve overall well-being. Here’s a look at their uses and medicinal value.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Deenadayalan Welcome to TNNEWS, your trusted source for news and updates from around the world. Our goal is to provide timely, informative content across various topics, including world news, technology, health, education, movies, and more. Please note that TNNEWS is an independent news platform created to share knowledge, useful links, and updates for your benefit. We are not affiliated with any government or political organization. The content here is purely for informational purposes and aims to provide insights into global and local trends. Feel free to explore, read, and stay informed!