நள்ளிரவில் அமெரிக்காவை அலறவிட்ட பீட்சா மர்மம்!! ராணுவ தலைமையகத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?

வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவின் கடந்த ஒரு வார காலமாகவே பல்வேறு பரபரப்புகள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் திடீரென Trump is dead என்ற ஹேஷ் டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டானது. டிரம்ப் இறந்துவிட்டார், டிரம்ப் உடல்நலம் குன்றிவிட்டது என நெட்டிசன்கள் தகவல்களை பரப்ப அது தீயாய் பரவியது.
உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இது மாறியது. இந்நிலையில் டிரம்பே நான் நலமாக இருக்கிறேன் என கூறியதை அடுத்து இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்குள்ளாகவே மற்றொரு பரபரப்பு அமெரிக்காவில் தொடங்கிவிட்டது. அதுவும் பீட்சா ஆர்டர்களால் ஏற்பட்ட பதற்றம் தான் அது. அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமை அலுவலகமான பென்டகன் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ளது.
பென்டகன் அமைந்துள்ள பகுதியில் திடீரென அதிக எண்ணிக்கையில் பீட்சா ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை அன்று மதியம் தொடங்கி நள்ளிரவு வரை டாமினோஸ் உள்ளிட்ட கடைகளில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பீட்சா ஆர்டர் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பீட்சா ஆர்டருக்கும் பரபரப்புக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். அதற்கு பின்னர் பெரிய மர்மமே இருக்கிறது.
பென்டகன் மற்றும் சிஐஏ அலுவலகங்கள் அருகே இருக்கும் கடைகளில் பீட்சா ஆர்டர்களை கண்காணிப்பதற்காகவே எக்ஸ் பக்கத்தில் பென்டகன் பீட்சா ரிப்போர்ட் என்ற ஒரு கணக்கே செயல்படுகிறது. அமெரிக்க அரசு அலுவலகங்கள் குறிப்பாக பாதுகாப்பு துறை அலுவலகங்களில் பீட்சா ஆர்டர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் உடனடியாக இதில் அறிக்கை வெளியிடப்படும்.
அமெரிக்காவில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டது, அல்லது அமெரிக்க அரசு பெரிய ராணுவ நடவடிக்கை எடுக்க போகிறது என்றால் தான் இந்த பகுதியில் பீட்சா ஆர்டர்கள் அதிகரிக்கும் என்பதே இதன் பின்னணி. பனிப்போர் காலத்தில் சோவியத் உளவாளிகள் இதற்காகே பென்டகன் அருகே இருக்கும் கடைகளில் உளவு பார்ப்பார்களாம். அமெரிக்க அரசு ராணுவ நடவடிக்கை எடுக்கிறது என்றால் முப்படை அதிகாரிகளும் இங்கே மையம் கொண்டிருப்பார்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் இதனால் இவர்களுக்கான உணவான பீட்சா ஆர்டர்கள் அதிகரிக்கும். பீட்சா ஆர்டர்கள் அதிகரித்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை உளவாளிகள் உறுதி செய்து தகவல் கொடுப்பார்களாம்.
இதனை பீட்சா உளவு என அழைக்கிறார்கள் அந்த வகையில் தான் வெள்ளி அன்று பீட்சா ஆர்டர்கள் அதிகரித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதே போல ஏற்கனவே ஆகஸ்ட் 27 மற்றும் ஆகஸ்ட் 28 ஆகிய தேதிகளிலும் இந்த பகுதிகளில் பீட்சா ஆர்டர் அதிகரிக்கப்பட்டதாக இந்த எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியானது . வெள்ளிக்கிழமை அன்று மதியம் ஒரு மணியில் தொடங்கி நள்ளிரவு வரை 300% என பீட்சா ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.
அமெரிக்க அரசாங்கம் ஏதேனும் மிகப்பெரிய ராணுவத் திட்டத்திற்கு தயாராகிறதோ அல்லது தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு நெட்டிசன்கள் பரபரப்பு அடைந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடப்பதாக அமெரிக்க அரசோ , பெண்டகனோ அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Why the increase in Pizza orders around Pentagon is creating Buzz in America?
Pentagon Pizza Report, an X account that tracks online pizza orders near government agencies like the Pentagon and CIA, reported a massive spike on Friday, leading to many speculations.What's Your Reaction?






