“அதிமுக ஆம்புலன்ஸில் போகும் கட்சியல்ல.. யாரும் அசைக்க முடியாது”.. உதயநிதிக்கு எடப்பாடி பதிலடி

“அதிமுக ஆம்புலன்ஸில் போகும் கட்சியல்ல.. யாரும் அசைக்க முடியாது”.. உதயநிதிக்கு எடப்பாடி பதிலடி
சென்னை: "அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் கட்சியல்ல, யார் என்ன செய்தாலும் கட்சியை அசைக்க முடியாது" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உங்களுடைய கட்சியே, விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள் எனப் பேசி இருந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக
துணை
முதல்வர்
உதயநிதி
ஸ்டாலின்
பேசுகையில்,
"எதிர்க்கட்சி
தலைவர்
எடப்பாடி
பழனிசாமி
சுற்றுப்
பயணத்தில்
மக்களை
சந்தித்து
வருகிறார்.
அவர்
ஒரு
பொதுக்கூட்டத்தில்
நடுரோட்டில்
நின்று
பேசி
கொண்டிருக்கும்
போது,
அங்கு
நோயாளிகளை
ஏற்றி
கொண்டு
வந்திருந்த
ஆம்புலன்ஸ்
வண்டியை
நுழையவிடாமல்,
அதற்கு
என்னவெல்லாம்
தடைகள்
செய்ய
முடியுமோ,
அதை
தொடர்ந்து
செய்து
கொண்டிருந்தார்.
அதிமுகவே ஆம்புலன்ஸில் போகும் - உதயநிதி
எதிர்க்கட்சி தலைவருக்கு நான் தெரிவித்துக் கொள்வது... நீங்கள் இன்றைக்கு ஆம்புலன்ஸ் வண்டிகளை எல்லாம் நிறுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒன்று புரியவில்லை. உங்களுடைய கட்சியே, விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் ஐசியூ-வில் தான் உங்களுடைய இயக்கம் அனுமதிக்கப்படும். உங்களையும் காப்பாற்றுகின்ற பொறுப்பை முதல்வர் செய்வார்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
எடப்பாடி பேச்சு
இந்நிலையில், இன்று ஆத்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் மக்களை சந்தித்து மக்கள் மத்தியில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு, கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினமும் செய்திகளில் கொலை நிலவரம் வெளியாகிறது. திமுக அரசு செயலற்ற அரசு. திறமையற்ற முதல்வரால் போதைப் பொருட்களை கட்டுபடுத்த முடியவில்லை. நான் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை, இன்றைக்கு போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று பேசுகிறார்.
எல்லாம் சீரழிந்து முடிந்த பின்னர் இப்படி சொல்கிறார். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு அதிகரித்துவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டை போதையில்லா மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை, 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை. சென்னையில் காவலரை சிலர் அடிக்கிறார்கள். இவர்கள் எப்படி மக்களைக் காப்பார்கள்? 8 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பாதுகாப்பில்லை. குற்றவாளிகளுக்கு போலீஸை கண்டு அச்சமில்லை. நடுரோட்டில் வெட்டுகிறார்கள்.
திமுக ஊழல்
மாநிலத்தின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொழிற்சாலைகள் இங்கு வரும். திமுக என்றாலே ஊழல் ஆட்சிதான். அந்தக்காலம் முதல் இன்றுவரை அப்படித்தான். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. பத்திரப்பதிவு துறையில் 10% கமிஷன் கொடுத்தால்தான் பதிவு செய்கிறார்கள்.
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடத்துக்குச் செல்வதாக தகவல் வருகிறது. அமலாக்கத்துறை முதலில் ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டது. முழுமையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வந்திருக்கிறது. அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் டாஸ்மாக் ஊழல் வெட்ட வெளிச்சமாக்கப்படும்.
அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் கட்சி அல்ல
சேலத்தில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில், நான் பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின். அப்படியெனில் பாதி கம்யூனிஸ்ட்டை திமுக விழுங்கிவிட்டது என்று அர்த்தம். கூட்டணிக் கட்சிகளே உஷாராக இருங்கள், உங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது, உங்கள் நிலையோ தலைகீழாக இருக்கிறது. மக்கள் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறீர்கள், மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பதில்லை. இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் கட்சியல்ல, யார் என்ன செய்தாலும் கட்சியை அசைக்க முடியாது. அதிமுக வலிமையாக உள்ளது. அதிமுகவுக்கு சாதி, மதம் கிடையாது. அவற்றுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது. போதைப்பொருள் புழக்கம் தாராளமாக உள்ளது" எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
What's Your Reaction?






