‘நாங்க இபிஎஸ் பக்கம் தான்.. புடைசூழ ஆதரவு தெரிவித்த பண்ணாரி எம்.எல்.ஏ.,’ நகரும் செங்கோட்டையன் ஏரியா!

அப்போது செங்கோட்டையன் ஆதரவாளர் என்று கருதப்பட்ட பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரியும் தனது ஆதரவாளர்களுடன் ஏகே செல்வராஜை சந்தித்து வாழ்த்து கூறி சால்வை அணிவித்தார்.

இபிஎஸ் ஆதரவாளர் என்பதை நிரூபித்த எம்.எல்.ஏ. பண்ணாரி கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 கெடு விதித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
இதையடுத்து அதிமுக அமைப்புச்செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார். செங்கோட்டையனிடம் வசம் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியை ஏ.கே.செல்வராஜுக்கு வழங்கியிருந்தார் இபிஎஸ்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இன்று புதிய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.கே.செல்வராஜை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
அப்போது செங்கோட்டையன் ஆதரவாளர் என்று கருதப்பட்ட பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரியும் தனது ஆதரவாளர்களுடன் ஏகே செல்வராஜை சந்தித்து வாழ்த்து கூறி சால்வை அணிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ணாரி, ‘’ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் அத்தனை நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுச்செயலாளர் இபிஎஸ் பின்னால் உறுதியாக நிற்கிறோம். செங்கோட்டையன் கட்சிப் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கோபி, பவானிசாகர், அந்தியூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகியதாக கூறப்படுவது உண்மையில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.
செங்கோட்டையன் பக்கம் இருக்கிறார்கள் என்று கூறப்பட்ட தொண்டர்கள், இபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுத்து ஏ.கே.செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
டாபிக்ஸ்
What's Your Reaction?






