இந்தியாவில் தங்கம் கையிருப்பு எவ்வளவு உள்ளதாம் தெரியுமா? டாப் 5 நாடுகள் லிஸ்ட்டை பாருங்க!

இந்தியாவில் தங்கம் கையிருப்பு எவ்வளவு உள்ளதாம் தெரியுமா? டாப் 5 நாடுகள் லிஸ்ட்டை பாருங்க!
சென்னை: தங்கம் விலை (gold price) வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு நகை பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரு கிராம் ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் தங்கம் கையிருப்பு எவ்வளவு உள்ளது? அதன் மதிப்பு என்ன? பிற நாடுகளில் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தங்கம்
விலை
இந்த
ஆண்டின்
துவக்கத்தில்
இருந்தே
தாறுமாறாக
உயர்ந்து
வருகிறது.
தற்போது
அமெரிக்காவின்
வரி
விதிப்பு
கொள்கை,
சர்வதேச
சந்தை
நிலவரம்
உள்ளிட்ட
காரணங்களால்
தங்கம்
விலை
நினைத்து
பார்க்க
முடியாத
அளவு
உயர்ந்துள்ளது.
விண்ணை முட்டும் தங்கம் விலை
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தையும், மார்ச் மாதத்தில் ரூ.65 ஆயிரத்தையும், ஏப்ரல் மாதத்தில் ரூ.70 ஆயிரத்தையும், ஜூலை மாதத்தில் ரூ.75 ஆயிரத்தையும் கடந்திருந்தது. கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை 'கிடுகிடு'வென அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கட்டுக்கடங்காத காளையாகவும், விண்ணை முட்டும் அளவாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
அந்த வரிசையில் நேற்றும் விலை அதிகரித்திருந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஜனவரி மாதம் முதல் நேற்று வரை மட்டும் கிராமுக்கு ரூ.2,855-ம், சவரனுக்கு ரூ.22,840-ம் உயர்ந்துள்ளது. தங்கம் என்பது மக்கள் வாங்கி அணிந்து கொள்ளும் ஆபரணமாக மட்டும் இல்லாமல், ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை குறிப்பதாகவும் அமைந்துள்ளது.
எத்தனையாவது இடத்தில் உள்ளது
இதனால், உலக நாடுகள் பலவும் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றன. தங்க கையிருப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது, எவ்வளவு உள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
* இந்தியாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நிலவரப்படி 3.51 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்து, மொத்தம் 694.23 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57.20 லட்சம் கோடி) ஆகியுள்ளது. இதில் தங்கமே பெரிய அளவில் பங்காற்றியுள்ளது.
ரூ.7.20 லட்சம் கோடி உள்ளது
* தங்கம் கையிருப்பு 1.7 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 86.769 பில்லியன் டாலர் ஆகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.20 லட்சம் கோடி ஆக உள்ளது.
* 2024 ஜூன் மாத நிலவரப்படி, 840.76 டன் இருந்த தங்கம் கையிருப்பு, 2025 ஜூன் நிலவரப்படி 879.98 டன் ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் சுமார் 39 டன் தங்கம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நாணய கையிருப்பில் தங்கத்தின் பங்கு சுமார் 12 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் கையிருப்பில் அதிகம் வைத்துள்ள நாடுகள் (Top Gold Reserve Countries):
* அமெரிக்கா: 8,133.5 டன் (ரூ.80.3 லட்சம் கோடி மதிப்பு)
* ஜெர்மனி: 3,351.5 டன் (ரூ.33.10 லட்சம் கோடி)
* இத்தாலி: 2,451.8 டன் (ரூ.24.20 லட்சம் கோடி)
* பிரான்ஸ்: 2,437 டன் (ரூ.24.10 லட்சம் கோடி)
* ரஷ்யா: 2,332.7 டன் (ரூ.23.10 லட்சம் கோடி)
* சீனா: 2,279.6 டன் (ரூ.22.60 லட்சம் கோடி)
* சுவிட்சர்லாந்து: 1,039.9 டன் (ரூ.10.30 லட்சம் கோடி)
* இந்தியா: 879.98 டன் (ரூ.7.20 லட்சம் கோடி) More From
What's Your Reaction?






