ஜப்பான் பிரதமர் பதவி விலகல்.. அமெரிக்க வரி நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் திணறல்!

ஜப்பான் பிரதமர் பதவி விலகல்.. அமெரிக்க வரி நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் திணறல்!
டோக்கியோ: என்னதான் ஜப்பான் வளர்ந்த நாடாக இருந்தாலும், அந்நாட்டின் அத்தியாவசிய பொருட்கள் மீது அமெரிக்க விதித்துள்ள வரி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இன்று ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவி விலகியுள்ளார்.
லிபரல்
டெமாக்ரடிக்
கட்சிதான்
ஜப்பானில்
ஆட்சி
அதிகாரத்தில்
இருந்து
வருகிறது.
இக்கட்சியின்
தலைவர்தான்
ஷிகேரு.
இவர்
பிரதமராகவும்
பதவி
வகித்து
வந்தார்.
68
வயதான
இவர்,
கடந்த
அக்டோபர்
மாதம்
பதவியேற்றிருந்தார்.
ஜப்பானிய மக்களின் பிரதான உணவு அரிசிதான். இந்த அரிசி மீது அமெரிக்கா வரியை அதிகமாக விதித்திருந்தது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டில் அரிசியின் விலை தாறுமாறாக உயரவே, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்தன. எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி, பதவியில் நீடித்த ஷிகேருவால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில்தான் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தேர்தல் நடந்தது.
இதில் இரண்டு அவைகளிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே ஷிகேரு தனது பிரதமர் பதவியையும், கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா செய்யும்போது அவர் பேசியதாவது,
"ஜப்பான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், அதிபர் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டதுடன், நாம் ஒரு முக்கிய தடையைத் தாண்டிவிட்டோம். இந்தத் தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடமையை கடத்த விரும்புகிறேன்" என்று இஷிபா உணர்ச்சிவசப்பட்ட குரலில் கூறினார்.
இவருக்கு அடுத்தபடியாக இவரது அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்த ஷின்ஜிரோ கொய்சுமி கட்சியின் புதிய தலைவராவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும் கட்சி தலைமை இதற்கான தேர்தலை நடத்திய பின்னர்தான் யார் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்கள்? என்பதும், யார் புதிய பிரதமராக பதவியேற்கிறார் என்பதும் தெரிய வரும். தற்போதைய சூழலில் ஜப்பானில் அரசியல் குழப்பங்கள் உச்ச நிலையில் இருக்கின்றன.
எப்படி இருப்பினும் அடுத்து பொறுப்பேற்கும் பிரதமர் தலைமையில் ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன. மிக முக்கியமாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களுக்கு அரிசியை குறைந்த விலையில் கிடைக்க செய்ய வேண்டும்.
What's Your Reaction?






