ரஷ்ய எண்ணெய் வாங்கும்.. இந்தியாவுக்கு கூடுதல் வரியை போடுங்க! அமெரிக்கா ஆணவ பேச்சு

Sep 8, 2025 - 14:35
 0  0
ரஷ்ய எண்ணெய் வாங்கும்.. இந்தியாவுக்கு கூடுதல் வரியை போடுங்க! அமெரிக்கா ஆணவ பேச்சு

ரஷ்ய எண்ணெய் வாங்கும்.. இந்தியாவுக்கு கூடுதல் வரியை போடுங்க! அமெரிக்கா ஆணவ பேச்சு

International
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது ஏற்கெனவே இருந்த வரியுடன் சேர்த்து கூடுதலாக 25% வரியை போட்டு மொத்த வரியை 50% ஆக அமெரிக்கா உயர்த்தியது. இந்நிலையில் இந்தியாவுக்கு மேலும் கூடுதல் வரியை விதிக்க வேண்டும் என அமெரிக்க கருவூலத் துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியிருக்கிறார்.

உக்ரைன் போரில் இந்தியா மற்றும் சீனா ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், எனவே இந்த நாடுகள் மீது கூடுதல் தடைகள் மற்றும் இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.

அதாவது, "அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்வந்து, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் தடைகள் மற்றும் இரண்டாம் நிலை வரிகள் விதித்தால், ரஷ்ய பொருளாதாரம் முழுமையாகச் சரிந்துவிடும். இது புதினைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரும். மறுபுறம் டிரம்ப் நிர்வாகம் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

இவர் சொல்வதை பார்த்தால், எண்ணெய் வாங்கிக்கொண்டு நாம்தான் ரஷ்யாவுக்கு போரை நடத்த காசு தருகிறோம் என்கிற கணக்காக இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எரிபொருளை வாங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் எதற்கு இந்தியா மீது மட்டும் வரி? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உண்மை என்ன?

ரஷ்யாவிடமிருந்து நாம் அதிக எண்ணெய் வாங்குகிறோமா? என்று கேட்டால் ஆம் என்று தைரியமாக சொல்லலாம். ஏனெனில் ரஷ்யா நமக்கு சலுகை விலையில் எண்ணெய் விற்கிறது. சலுகை விலை எனில் ஏதோ சும்மா ஆஃபர் போட்டு ஏமாற்றும் கதை கிடையாது. உண்மையாகவே சலுகை விலையில்தான் நமக்கு எண்ணெய்யை விற்றது. கடந்த 2022ல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் ரூ.12,000 ஆக இருந்தபோது ரஷ்யா நமக்கு வெறும் ரூ.5,280க்கு விற்பனை செய்தது. இது பாதி விலையை விட குறைவு. இவ்வளவு குறைவாக கிடைக்கும் எண்ணெயை நாம் எப்படி வேண்டாம் என சொல்ல முடியும்?

2022-2024க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாம் ரஷ்ய எண்ணெய் மூலம் சுமார் ரூ.2.9 லட்சம் கோடியை சேமித்திருக்கிறோம். தவிர ரஷ்ய எண்ணெயில் இருந்து டீசலை பிரித்தெடுப்பது மிகவும் சுலபமான வேலை. இந்தியாவின் வேளாண் தொழிலில் டீசலின் பயன்பாடு இன்றும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ரஷ்யாவை விட்டுவிட்டு வேறு சில நாடுகளில் எண்ணெய் வாங்கினால், அதன் இறக்குமதி விலை அதிகரிக்கும். எனவே இந்த வகையிலும் ரஷ்ய எண்ணெய் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது.

சரி இதனால் இந்தியாவுக்கு மட்டும்தான் லாபமா என்று கேட்டால் கிடையாது. உலக நாடுகளுக்கும் இந்தியா லாபத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. அதவது ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், கச்சா எண்ணெய் விற்கும் மற்ற நாடுகளும் விலையை குறைக்கும் நெருக்கடிக்கு ஆளாகின. எனவே இன்று ஒரு பேரல் எண்ணெய் ரூ.5,7805 ஆக இருக்கிறது. ஒருவேளை ரஷ்யா எண்ணெய்யை இந்தியா வாங்கவில்லை எனில் ஒரு பேரல் ரூ.1,7624.68க்கு உயர்ந்திருக்கும். ஆக உலக நாடுகளுக்கு இந்தியா நன்மைதான் செய்திருக்கிறது.

இதை புரிந்துக்கொள்ளலாமல் இந்தியா மீது அமெரிக்கா தொடர்ந்து வரியை விதித்து வருகிறது. இந்த வரி காரணமாக அமெரிக்காதான் பின்னடைவை சந்திக்கும் என்பது சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. More From

Prev
Next
English summary
The US Treasury Chief has declared that imposing tariffs on nations purchasing Russian oil could lead to the collapse of the Russian economy. This strategy aims to tighten the noose on Russia’s primary revenue source by discouraging global trade in its crude, complementing existing measures like the G7’s oil price cap.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Deenadayalan Welcome to TNNEWS, your trusted source for news and updates from around the world. Our goal is to provide timely, informative content across various topics, including world news, technology, health, education, movies, and more. Please note that TNNEWS is an independent news platform created to share knowledge, useful links, and updates for your benefit. We are not affiliated with any government or political organization. The content here is purely for informational purposes and aims to provide insights into global and local trends. Feel free to explore, read, and stay informed!